திங்கள், 12 மே, 2014

தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்: தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொருளாளர் வள்ளிவேலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பிளஸ் 2 தேர்வில் குமரி மாவட்டம் 95.14 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.இந்நிலையில், ஒரு சில பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைய ஆசிரியர்கள் காரணம் எனக் கூறி 3 தலைமை ஆசிரியர்கள், 12 முதுநிலை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டிக்கிறது.இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநரகமோ, பள்ளிக் கல்வித் துறையோ எந்த உத்தரவும் பிறக்காத நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்து இருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.