வெள்ளி, 9 மே, 2014

பிளஸ் 2 உடனடிதேர்வு எப்போது?

பிளஸ் 2 உடனடிதேர்வு எப்போது?
*பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர், தாங்கள் விரும்பிய பாடங்களின்
விடைத்தாள்களின் நகல் பெறவும், மறுகூட்டல் கோரியும், இன்று முதல், 14ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
*இந்தாண்டு தனித் தேர்வு எழுதியவர்கள், அவரவர் தேர்வு எழுதிய மையங்களில், இன்று, மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.*பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு, ஜூன் இறுதியில், உடனடித் தேர்வு நடத்தப்படும். உடனடித் தேர்வை எழுத விரும்பும் பள்ளி மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வு மாணவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும், வரும், 12ம் தேதி முதல், 16ம் தேதி வரை, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக