தருமபுரியை பூர்வீகமாகக் கொண்ட இரண்டரை வயது சிறுவன் இஷாந்த், 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் கொடிகளை சரியாக அடையாளம் காட்டி அசத்துகிறான்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாண தலைநகரான போனிக் ஸில் வசித்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிபிரசாத்-சரண்யா தம்பதியின் ஒரே மகன் இஷாந்த். இரண்டரை வயதான இந்தச் சிறுவன் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் கொடிகளைக் காட்டினால் கொடிக்கான நாட்டின் பெயரை சரியாக கூறிவிடுகிறான்.

அதேபோல தமிழ் உயிர் எழுத்துகள், எண்கள், ஆங்கில எழுத்துகள் ஆகியவற்றை எப்படி கலைத்துக் கொட்டினாலும் அவற்றை வரிசைப்படி அடுக்கி வைக்கிறான். கணிதத்தில் வரும் வட்டம், சதுரம், அரை வட்டம், செவ்வகம், அறுகோணம் உள் ளிட்ட உருவங்களைக் காட்டினா லும் துல்லியமாகக் கூறுகிறான். இதுதவிர ஆங்கில மாதங்களை வரிசைப்படி கூறுதல், உலக வரைபடத்தில் தேசங்களை அடையாளம் காட்டுதல் என படு சுட்டியாக செயல்படுகிறான்.

டேப்லெட்டில் அமெரிக்காவின் வரைபடத்தில் உள்ள 50 மாகா ணங்களையும் ஒன்றாக குவித்து வைத்து அந்த துண்டுகள் ஒவ்வொன்றையும் எடுத்து அதற்கே உரிய இடங்களில் பொருத்தி அமெரிக்காவின் முழு உருவத்தையும் அமைத்து விடு கிறான். அம்மா இங்கே வா வா.. பாடலில் தொடங்கி சுப்ரபாதம் உள்ளிட்ட சில பக்தி பாடல்கள் வரை அழகான மழலையில் பாடி அசத்துகிறான். இப்படி இஷாந்தின் பிரமிக்க வைக்கும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தருமபுரியில் வசிக்கும் தனது தாத்தா பாட்டியான ராமசாமி-மங்களா வீட்டுக்கு தாய் சரண்யாவுடன் சிறுவன் இஷாந்த் வந்துள்ளான். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் செய்யும் அனைத்து செயல்களையும் சுட்டிப் பையன் இஷாந்த் பிசகாமல் செய்து அசத்துவதைக் கண்டு அவனது குடும்பத்தாரும் உறவினர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

சிறுவனின் தாய் சரண்யா கூறும்போது, 'இஷாந்த் 11 மாத குழந்தையாக இருந்தபோதே 3 வண்ணங்களை சரியாக தெரிந்து வைத்துக்கொண்டு அடையாளம் காட்டுவான். அதைப் பார்த்து நானும் என் கணவரும் தொடர்ந்து இஷாந்தை ஊக்கப்படுத்தி வந் தோம். அவனுக்கு பொம்மை களுக்கு பதிலாக கற்றல் தொடர் பான பொம்மைகள், புத்தகங் களைத்தான் இதுவரை வாங்கிக் கொடுத்துள்ளோம்.

அமெரிக்காவில் நாங்கள் வசிக் கும் பகுதியில் உள்ள பள்ளியில் அவனை அழைத்துச் சென்றபோது 5 வயது குழந்தைகளுக்கு உரிய ஐ.க்யூ இஷாந்துக்கு இருப்பதாகக் கூறினர். இஷாந்துக்கு நல்ல ஊக்கம் கொடுத்தால் சிறந்த அறிவாளியாக வருவான் என்றும் அவர்கள் ஆலோசனை வழங்கினர்' என்றார் .