புதன், 20 ஆகஸ்ட், 2014

யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார் காலமானார்



பழம்பெரும் யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார் இன்று அதிகாலை 3.15 மணியவளவில் காலமானார். அவருக்கு வயது 96.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வயோதிகம் காரணமாக ஏற்பட்ட இதய கோளாறு, கிட்னி பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்த பி.கே.எஸ்.ஐயங்கார் கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 3.15 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.

1991-ல் பத்ம ஸ்ரீ, 2002-ல் பத்ம பூஷண், 2014-ல் பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றார். 2004-ல் டைம் மேகசின் அவரை உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பேரில் ஒருவராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் இரங்கல்:

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் மறைவு என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் யோகாவை அறிமுகப்படுத்திய பி.கே.எஸ்.ஐயங்காரை ஒரு சிறந்த குருவாக, ஒரு ஞாநியாக பல தலைமுறைகள் நினைவுகூரும்" என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக