வியாழன், 15 மே, 2014

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தாலும், சில பள்ளிகளின், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்துவிட்டது. போதியஆசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால், முக்கிய பாடங்களில், மாணவர்களால் அதிக மதிப்பெண்களை பெறமுடியாமல் போனது. இந்நிலையில், மாவட்ட வாரியாக, அனைத்து அரசு பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் குறித்து ஆய்வு செய்ய,கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசு பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் என்ன?
கடந்தாண்டை விட குறைந்ததா, அதிகரித்ததா? குறைந்திருந்தால், அதற்கு தலைமையாசிரியர் கூறும் விளக்கம்என்ன, அதை, அடுத்தாண்டு அதிகப்படுத்துவது எப்படி போன்ற விவரங்கள் ஆராயப்பட உள்ளன.அதுகுறித்த அறிக்கையை, தலைமையாசிரியர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரியிடம் அளிப்பர். அந்தஅறிக்கை, பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில், சென்னையில், விரைவில்,உயரதிகாரிகளின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, தேர்ச்சி விகிதத்தை மேம் படுத்த, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்,என்றார்.