செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

டி.இ.டிதேர்ச்சி பெற்ற சீர்மரபினர் சாதி சான்றிதழ்களை சமர்பிக்கஇன்று (ஆக.,12) கடைசி நாள்!

டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்ற சீர்மரபினர் இடைநிலை ஆசிரியர்கள் உரிய
சாதி சான்றிதழ்களை சமர்பிக்க, இன்று (ஆக.,12) கடைசி நாள், என டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது.

கள்ளர் சீரமைப்பு துறையில், பல ஆண்டுகளாக காலியாக உள்ள இடைநிலைஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, டி.இ.டி.தேர்வில் தாள்-1ல் தேர்ச்சி பெற்ற மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த சீர்மரபினர் பிரிவில் உள்ளஇந்து பிரமலைக்கள்ளர் வகுப்பை சேர்ந்தவர்கள், மதுரையில் உள்ள ஓ.சி.பி.எம்., பள்ளியில் உரிய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகி, சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்,என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று துவங்கிய சான்றிதழ் சரி பார்ப்பு பணி இன்றுடன் (ஆக., 12) முடிவடைகிறது. உரிய
சாதி சான்றிதழை சமர்பிக்காதவர்கள் இப் பிரிவின் கீழ் பணிநியமனம் செய்யப்பட மாட்டார்கள், என ஆசிரியர்தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.