செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஏன்? ஆசிரியர் தேர்வுவாரியம் விளக்கம்

தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஏன்? ஆசிரியர் தேர்வுவாரியம் விளக்கம்
தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்)வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை,நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது.இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீதஇடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாகநியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால் தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன.இவ்வாறு,டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக