வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நாசா வெளியிட்ட வீடியோ காட்சியில் ஏலியன்?

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான 'நாசா' வெளியிட்ட வீடியோ படம் ஒன்றில் நிலவில் மனித உருவம் நடப்பதுபோன்ற காட்சிகள் உள்ளன. அது வேற்றுக் கிரக வாசியாக‌ இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான விவாதங்கள் இணையத்தில் சூடுபிடித்துள்ளன.

நிலவில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதைப் பற்றி நாசா பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. அதுதொடர்பாகச் சில வீடியோ காட்சிகளை நாசா சமீபத்தில் வெளியிட்டது. அதில் நிலவில் ஓர் உருவம் நடப்பதுபோன்ற காட்சிகள் இருக்கின்றன.

இந்த வீடியோ காட்சிகளை ஒருவர் 'யூ டியூப்' தளத்தில் பதிவேற்றினார். பதிவேற்றிய சில நாட்களிலேயே சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள். இது ஒளியைக் கொண்டு செய்யப்பட்ட மாயம் என்றும் அந்த வீடியோ காட்சியை எப்படி பல்வேறு விதத்தில் விளக்க முடியும் என்பது குறித்தும் ஒரு கட்டுரையை அந்த வீடியோ காட்சியுடன் சேர்த்து யூ டியூப் தளம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் மனித உருவம் போன்ற ஒன்று நடப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன. இதைப் பார்த்த பலர் விண்வெளியில் வேற்றுக் கிரக வாசிகள் இருக்கலாம் என்று கமென்ட் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சி குறித்து இதுவரை நாசா எதுவும் சொல்லாத நிலையில், பெரும்பாலான பார்வையாளர்கள் இதை புகைப்பட ஜாலம் என்று கூறி `ஏலியன்' கருத்தை மறுத்துள்ளனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக