செவ்வாய், 13 மே, 2014

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, எவ்வித பிழையும் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, எவ்வித பிழையும் இன்றி மதிப்பெண்
சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிகள், மே 9ல் வெளியாகின. அன்றே, அனைத்துப்பள்ளிகளுக்கும்,
மாணவர்களின் தேர்வு எண் படி, மதிப்பெண் பட்டியல் தொகுப்பு வழங்கப்பட்டது. சில
பள்ளிகளில், மாணவர்களின் இன்ஷியல், பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவை, தவறாக இருந்தன. இதுகுறித்து தேர்வுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அப்பிழைகளை திருத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, மாணவரின் விபரங்கள் தவறாக இருந்தால், முதன்மைக்கல்வி அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த விண்ணப்பம் தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிழைகள் திருத்தப்படுகின்றன. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்வுக்கு முன், மாணவர்களின் விபரங்கள் 'ஆன்லைனில்'பதிவேற்றம் செய்யப்பட்டன. அதில் சில பிழைகள் உள்ளன. அதை அப்படியே கொடுத்தால் குழப்பம் ஏற்படும்.பிழைகளை சரி செய்து, மே 21ல், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக