செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

தமிழ் வழி 140 முதுகலை ஆசிரியர்கள்18 ம் தேதிக்குள் பணி நியமனம்!

தமிழ் வழி 140 முதுகலை ஆசிரியர்கள்18 ம் தேதிக்குள் பணி நியமனம்!

கடந்த ஆண்டு,(2012) முதுகலை ஆசிரியர்போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய,மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர்,, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். 18 ம் தேதிக்குள், அனைவருக்கும், பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது